எத்தனை பளு தூக்கிகள் வந்தாலும்
இணையாகாதது அன்னையின் பேறு காலம்
எத்தனை கயிறுகள் வந்தாலும்
இணையாகாதது அன்னையின் தொப்புள் கொடி
எத்தனை குளிர் கடத்தா ஆடைகள் வந்தாலும்
ஈடாகாதது அன்னையின் அணைப்பில் வரும் சூடு
எத்தனை சுனாமி வந்தாலும்
மாறாதது அன்னையின் அன்பு
எத்தனை சூரியன் வந்தாலும்
கரையாதது அன்னையின் பாசம்
எத்தனை மொழிகள் கற்றாலும்
முதல் வார்த்தையாவது அம்மா
எத்தனை சொந்தங்கள் வந்தாலும்
நாம் தேடும் முதல் சொந்தம் அம்மா
எத்தனை பெரிய நாற்காலியில் அமர்ந்தாலும்
இணையாகாதது அன்னையின் மடி
எத்தனை வாசனை திரவியம் பூசினாலும்
மாறாதது அன்னையின் பால் வாசனை
எத்தனை படுக்கையில் படுத்தாலும்
மீண்டும் கிடைக்காதது அன்னையின் சேலையில் கட்டிய தொட்டில்
மீண்டும் கிடைக்காத வரம் அன்னை
வரத்தை சாபமாக்காதீர்கள்
இந்துமதி
Tags : அன்னை


